நிறைமாத மனைவியை விட்டுவிட்டு இராணுவத்திடம் தப்பிச்சென்ற தமிழ் தேசிய அரசியல்வாதி!!

29.01.2023 12:13:27

இன்று வீரம்பேசிக்கொண்டு சுற்றித்திரிகின்ற ‘கிளிநொச்சி நாம்பன்’ பற்றி அறிந்துகொள்ள, அவரது ஊரில விசாரிச்சம்.

ஊரவர்கள் சொன்னதை அப்படியே இங்கு தருகிறம். பிறகு அது பிழை இது பிழை என்று எங்களிடம் தகறாறுக்கு வரப்படாது..

விடுதலைப்புலிகள் கோலோச்சிய காலத்தில் அவரை யாரும் கண்டு கொள்வதில்லை.

இப்பொழுது போல அப்பொழுது அவர் தேசியம் பேசித்திரியிறதும் இல்ல.. நாம்பன் மாடு மாதிரி ஊர்மேயிறதும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், அவர் யாரென்றே அப்பொழுது பலருக்கும் தெரியாது.

மோதல் உக்கிரமடைந்த போது கட்டிய மனைவியை வயிற்றில் பிள்ளையுடன் விட்டுவிட்டு இராணுவ கட்டுப்பாட்டிற்கு தப்பிசென்றவர்தான் தற்போதைய கிளிநோச்சி நாம்பன்.

அந்தளவுக்கு வீரத்திருமகன்.

'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை' என்பது போல, விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் அரசியலுக்கு வந்தவுடன் தானே தமிழ் மக்களின் தேசிய தலைவர் என்ற தோற்றத்தில் அவரின் செயற்பாடுகள் அமைய ஆரம்பித்தன.

அவரது அரசியல் பிரவேசம் கூட தற்போது அவர் அங்கம் வகிக்கும் கூட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் ஆயுத குழு ஒன்று அவருக்கு வாய்ப்பளித்தமையாலேயே ஆரம்பமானது.

ஆனால் இன்றோ தமிழரசுக்கட்சியின் முந்திரிக்கொட்டையுடன் சேர்ந்து, அதே ஆயுதக் குழுவை தீண்டத்தகாததாக திட்டித்தீர்த்துவருகிறார்.

“..அரசியலில இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி டயலாக் வேற பேசுறாராம்..

இவரது அரசியல் கிளிநொச்சியில். ஆனால் அவரது குடும்பம் சுகபோகமாக வாழ்வதோ யாழ்ப்பாணத்தில்.

கிளிநொச்சியில் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு நீண்டதூரம் பிஞ்சுக்கால்களால் நடந்து செல்கையில் அவரது பிள்ளைகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் பிரபல கல்லூரிகளில்.

அரசியல் கிளிநொச்சியில் குடும்பம் யாழ்ப்பாணத்தில்  - ஆனால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்க கடும் எதிர்ப்பு.

அங்குள்ள விவசாய அமைப்புகளை கிள்ளிவிட்டு மறைகரமாக ஒற்றைக்காலில் தண்ணீர் வழங்கக்கூடாது என நிற்கிறார்.

இதுதான் ராஜதந்திர அரசியலாம்..

கிளிநொச்சி நாம்பன் பற்றி மற்றொரு கதையும் ஊரில பேசிக்கொள்கிறார்கள்.

கிளிநொச்சியில் இருக்கும் மண் மாபியாக்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும், வருமானத்தில் பெரிய பங்கு நாம்பனுக்குத்தானாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

'மண் மாபியாக்கள் எவ்வளவுதான் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், நாம்பனுக்கு வால் பிடித்துத்திரிகிற அல்லக்கைகளுக்கு வழிச்சுக்கொட்டவே போதாது..' என்றும் உள்வீட்டுக்குள்ளேயிருந்து கூறுகிறார்களாம்.

கிளிநொச்சி நாம்பன் பற்றி இன்னும் பல கதைகள் ஊருக்குள்ளே உலாவுது. ஆனா அவையெல்லாம் எழுத்தில எழுதக்கூடிய விடயங்கள் அல்ல.