உக்ரைன் ரஷ்யா போர்நிறுத்தம் மோடியின் கைகளில்!

22.01.2023 14:40:56

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வருவதற்கான முயற்சி நடந்தால், அது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சாத்தியமாகும்' என, பிரான்சைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது ஓராண்டை எட்ட உள்ள நிலையில், தற்போது இரு தரப்பும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளரான லாரா ஹயீம், அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

ஆயுத உதவி

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

''உக்ரைன் மீதான போர் நீண்ட காலம் நடக்கும் என்றே தோன்றுகிறது. உக்ரைன் வீரர்கள் மிகவும் தைரியத்துடனும், வீரத்துடனும் போரிட்டு வருகின்றனர்.

இந்தப் போர் குறித்து அமெரிக்க மக்கள் எதுவும் பேசாதது ஆச்சரியமளிக்கிறது. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்கிறது.

அதனால், இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் ரஷ்யாவும் இல்லை.

நரேந்திர மோடி

இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் நாடியுள்ளது. இதனால், உக்ரைனும் விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை.

இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சு நடத்தும் சூழ்நிலை தற்போது இல்லை.