வவுனியாவில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலி

20.09.2021 05:29:40

வவுனியாவில் 5 பேர் கொரோனா தொற்றினால் நேற்று (19) மரணமடைந்தனர்.

குறித்த நபர்களில் நால்வர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தனர்.

ஏனைய ஒருவர் வீட்டில் மரணமடைந்திருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.