பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை
08.12.2021 06:02:39
அரசுப் பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில இடங்களில் பேருந்து படிக்கட்டில் நின்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர் என்று போக்குவரத்து துறை கூறியுள்ளது. போதிய இட வசதி ஏற்படுத்திக் கொடுத்து நின்று பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
பயணிகள் அதிகமாக இருக்கும் போது கூடுதல் பேருந்து இயக்குமாறு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.