சண்முகநாதனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22.12.2021 11:54:40
கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் மடல் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உடன் பிறவாச் சகோதரராக உலவிய அண்ணன் சண்முகநாதன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. இயற்கை அவரை பறித்து கொண்டதை ஏற்க மறுக்கிறது இதயம். யாருக்கு ஆறுதல் சொல்வேன் நான்? கலைஞரை காண சென்றுவிட்டீர்களா? தலைவருக்கு உதவியாகவே இருப்பேன் என்று உறுதியோடு போய்விட்டீர்களா? என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.