ஆரம்ப பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு

01.03.2023 15:41:36

ஜெர்மனியின் வடமேற்கில் உள்ள லோயர் சாக்சனி மாநிலத்தில் உள்ள பிரமாஷேவில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்ததாக ஜெர்மன் போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 16 மற்றும் 81 வயதுடைய நபர்கள் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பள்ளிக்கோ அதன் மாணவர்களுக்கோ ஆபத்தில்லை என்றும் ஆரம்ப பள்ளிக்கும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்றும் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று காலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.