சீமானுடன் தமிழ்த் தேசிய பேரவை சந்திப்பு!
19.12.2025 15:00:00
|
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியதுடன், சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது |
|
இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம். ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் இதன்போது கையளிக்கப்பட்டது. |