ஆழ்கடல் குகையில் சிக்கிய இத்தாலியர்கள்.
|
மாலத்தீவில் ஆழ்கடல் குகையில் சிக்கிய இரண்டு இத்தாலியர்களின் உடலை பின்லாந்து நிபுணர்கள் குழு மீட்டெடுத்துள்ளது. மாலத்தீவின் வாவு அட்டோஸ்(Vaavu Atoll) பகுதியில் உள்ள ஆழ்கடலில் குகைகளில் கடந்த வியாழக்கிழமை 5 இத்தாலியர்கள்(பயிற்சியாளர் ஒருவர் உட்பட) ஆய்வு செய்ய சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொண்டனர். பயிற்சியாளர் உடல் மட்டும் குகை வெளியே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள நான்கு பேரின் உடலை மீட்கும் பணி கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகிறது.
|
|
மீட்பு பணிக்கு இடையில் உள்ளூர் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்த மீட்பு பணியை மாலத்தீவு அரசு, பின்லாந்தை சேர்ந்த மூன்று தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்தி நடத்தி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 60 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஆழ்கடலில் குகையில் உயிரிழந்த 4 பேரின் உடலும் இருப்பதை பின்லாந்து நிபுணர்கள் குழு கண்டுபிடித்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை 2 பேரின் உடலை மீட்டுள்ள பின்லாந்து நிபுணர்கள் குழு, புதன்கிழமை மீதமுள்ள 2 பேரின் உடலை மீட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Divers' Alert Network (DAN) Europe மூலம் வரவழைக்கப்பட்ட இவர்கள், closed-circuit rebreathers (CCRs) என்ற நவீன கருவியை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலத்தீவில் பொழுதுபோக்கு டைவிங்கிற்காக சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஆழம் 30 மீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. |