ரஷ்ய வீரர்களான ரூபெல்வ்- கச்சனோவ் அடுத்த சுற்றுக்கு தகுதி - உலக டென்னிஸ்

04.03.2021 10:06:28

ஏபிஎன் அம்ரோ உலக டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்ய வீரர்களான ஹென்ரி ரூபெல்வ் மற்றும் கரேன் கச்சனோவ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்ய வீரரான ஹென்ரி ரூபெல்வ், பிரித்தானியாவின் ஆண்டி முர்ரேவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹென்ரி ரூபெல்வ், 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


மற்றொரு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்ய வீரரான கரேன் கச்சனோவ், பிரித்தானியாவின் கேமரூன் நோரியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கரேன் கச்சனோவ் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.