"கரூர் கணக்கு இன்னும் முடியல, உங்கள விடமாட்டோம்" .
|
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று இணையும் நிகழ்வானது மகாபலிபுரத்தில் உள்ள அரங்கில் பிரம்மாண்டமான நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,''கரூர் விஷயத்தில் நடந்த கணக்கு வழக்கு இன்னும் முடியவில்லை. அந்த கணக்கு வழக்கை முடிக்காமல் விடமாட்டோம். எங்கள் தலைவர் விஜய் மீது கை வைத்தீர்களே உங்களை விடமாட்டோம். |
|
போலீசாரை வைத்து மக்களை கொன்று குவித்தீர்களே? அதற்கான எல்லா உண்மைகளும் வெளியே வரும். சட்டம் தன் கடமையை செய்யும். கரூரில் நடந்த சூழ்ச்சியை கண்பட பார்த்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இதை மறைப்பதற்காக தான் இப்பொழுது 10 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குவதற்கு 50 கோடி ரூபாய் பேரம் பேசுகிறார்கள். போன் அடித்த உடனே போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டார் நமது எம்எல்ஏ. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே எங்களுடைய ஒரே ஒரு வேட்பாளரை நீங்கள் விலை கொடுத்து வாங்க முடியாது. காசு கொடுத்து வேலை செய்வதற்கும் காசு கொடுக்காமல் வேலை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இங்குள்ள அதிமுக தொண்டர்கள் யாரும் காசுக்காக வரவில்லை எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்காக வந்துள்ளனர்'' என்றார். |