தியாக தீபம் திலீபனின் நினைவலைகள்

17.09.2022 09:00:00

தியாக தீபம்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த மூன்றாவது தினம் இன்றாகும்.

ஈழத்தமிழ் மக்களின் விடிவிற்காய் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து நல்லூர் முன்றலில் ஆகுதியாகிய திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று 15 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

இதன் போது ஒவ்வொரு நாளும் மாவீரர்களின் பெற்றோரினால் நினைவுசுடர் ஏற்றிவைக்கப்படும்.