எதிர்பார்க்காத இளம் நடிகை

25.05.2022 17:00:00

 

வம்சி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

சமீபத்தில், இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும், அதனால் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

 

இந்நிலையில், இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிகை Mehreen Pirzada கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். விரைவில் இந்த தகவல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.