உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள்.

25.08.2025 08:22:06

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வௌியிட்டுள்ளார். 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தமது எக்ஸ் கணக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் அவர் கவலை வௌியிட்டுள்ளார். 

2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. 

அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில் அவை எந்தவொரு குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையையும் கொண்டிருக்காது. 

ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நான் முழு ஆதரவை வழங்குகிறேன், 

ஆனால் தயவுசெய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என்று எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.