சென்னை அணிக்கான வெற்றி இலக்கு!

11.10.2021 02:57:00

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது அணியைத் தெரிவு செய்வதற்கான தகுதிக்காண் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 173 ஓட்டங்களைச் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ப்ரித்வி ஷா 60 ஓட்டங்களையும், அணித்தலைவர் ரிஷப் பண்ட் 51 ஓட்டங்களையும், சிம்ரன் ஹெட்மியர் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 29 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 173 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.