துணை வேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்: தமிழக அரசு
23.12.2021 10:55:26
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விசாரணை ஆணையத்தின் அறிக்கை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் விளக்கத்தை தொடர்ந்து வழக்கை ஜன.3க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.