‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ தமிழ்ப் பதிப்பு டீசர் வெளியீடு.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பு டீசர் வெளியாகியுள்ளது.
கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹேம்ஸ்வொர்த், டாம் ஹிடில்ஸ்டன், பால் ரூட், பெனடிக்ட் கம்பர்பேட்ச் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தில் அயர்ன்மேன் கதாபாத்திரம் உயிரிழந்த நிலையில், அக்கதாபாத்திரத்தில் நடித்த ரொபர்ட் டவுனி ஜூனியர், ‘டூம்ஸ்டே’ திரைப்படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
உலகளவில் டிசம்பர் 18ஆம் திகதி வெளியாகவுள்ள இப்படம், இந்தியாவில் டிசம்பர் 17ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு டீசரில் டாக்டர் டூம் கதாபாத்திரத்துக்கு ரவிசங்கர் தேவநாராயணன் குரல் கொடுத்துள்ளார்.
முன்னதாக, அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்குத் தமிழில் ரவிசங்கர் குரல் கொடுத்திருந்த நிலையில், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். இதனால் ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்திருந்தன.