சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கமல்.. கொரோனா தொற்று குறித்து அவரே கூறிய தகவல் இதோ!

05.12.2021 12:06:34

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மக்கள் நீதி மய்யம், மற்றும் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படம் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். இதையடுத்து சென்னை திரும்பிய பிறகு அவருக்கு இருமல் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பரிசோதனை செய்ததில் கடந்த 22ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.