பிரான்ஸ்- ஜேர்மனியிலும் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிப்பு !

22.05.2022 16:27:45

பல உயிர்களை காவு கொண்ட கொரோனா வடுவே முழுமையாக ஆறாத நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் உலகில் பல நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகின்றது.

 

அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பை ஏற்படுத்தும் குரங்கு அம்மை நோய், தற்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலும் வேறூண்ட தொடங்கியுள்ளது.

இதன்படி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது அது சிலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஸ்பெயின், போர்துகல் ஆகிய நாடுகளிலும் இந்த நோயினால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளது

உறுதியாகியுள்ளது. கனடாவில் 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றனர்.

குரங்கு அம்மை என்பது ஒரு அம்மை வைரஸால் ஏற்படும் அரிதான தொற்று ஆகும். இது வேரியோலா வைரஸின் அதே குடும்பம் மற்றும் வகையைச் சேர்ந்தது. தொற்று ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, தசை வலிகள், சோர்வு மற்றும் வீங்கிய நிணநீர் மண்டலங்களின் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. தடிப்புகள் பின்னர் முகத்தில் தோன்றும் மற்றும் உடல் முழுவதும் பரவி, இறுதியில் நிறமாற்றம், கொப்புளங்கள், சிரங்குகள் மற்றும் தோலில் உயரமான புடைப்புகள் ஆகியவற்றை உருவாக்குகிறது.