விரைவில் இலங்கை அனுதாபம் தெரிவிக்கும்!

03.03.2026 08:34:19

மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் போரில் உயிரிழந்த ஈரான் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, இலங்கை அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தனது இரங்கலைத் தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துக் கூறுகையில் ஈரான் அரசுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்கு இலங்கை அரசு தனது இரங்கல் செய்தியை வெளியிடும்.

இதற்கான பணிகளை வெளிவிவகார அமைச்சு விரைவில் முன்னெடுக்கும், எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைவர்களுடன் இலங்கை நீண்டகாலமாக நெருக்கமான உறவைப் பேணி வரும் நிலையில், அவர்களின் மறைவுக்கு இதுவரை ஏன் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்தார் இலங்கையின் எரிபொருள் தேவை மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஈரான் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. இவ்வாறானதொரு சூழலில், தற்போதைய போரினால் உயிரிழந்த அந்த நாட்டுத் தலைவர்களுக்கு உரிய முறையில் அரசாங்கம் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.