நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறைதண்டனை

19.02.2024 16:16:36

சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதால் நடிகர் எஸ்வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக  நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர் குறித்து தரக்குறைவாக பேஸ்புக்கில் எஸ்வி சேகர் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எஸ்வி சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

 

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் எஸ் வி சேகர் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி ஜெயவேல், அவருக்கு ரூபாய் 15,000 அபராதம் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த தண்டனையை எதிர்த்து நடிகர் எஸ்வி சேகர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.