இலங்கைக்கு வரும் டீசல் தாங்கிய கப்பல்

29.05.2022 06:45:19

டீசல் அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன் நேற்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த மசகு எண்ணெய் கப்பலிலிருந்து தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இன்றைய தினம் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் விரைவில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.