'இடி முழக்கம்' படத்தில் பாடிய வினீத் சீனிவாசன்

21.08.2021 10:05:35

 

மலையாளத் திரையுலகின் முக்கிய இயக்குனரும், நடிகருமான வினீத் சீனிவாசன் 'இடி முழக்கம்' படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் இது.

இயக்கம், நடிப்பு மட்டுமல்லாமல், இசையமைப்பு, பாடல் எழுதுவது, பாடுவது, டப்பிங் பேசுவது என பல திறமைகளை உள்ளடக்கியவர் வினீத். சென்னையில் இஞ்சினியரிங் படிப்பை முடித்த வினீத் நன்றாகத் தமிழ் பேசுபவர்.

மலையாளத்தில் நிறைய பாடல்களைப் பாடியுள்ள வினீத், ஏற்கெனவே தமிழ்ப் படங்களில் ஓரிரு பாடல்களைப் பாடியிருக்கிறார். இப்போது என்ஆர் ரகுநந்தன் இசைமைப்பில் 'இடி முழக்கம்' படத்திற்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

அது பற்றி படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி, “எனது அன்பிற்குரிய யதார்த்த நாயகன் வினீத் சார். அவரது இனிய குரலில் பாடி எங்களை மிதக்க வைத்துவிட்டார். அற்புதமான மெலடி பாடலை ரகுநந்தன் கொடுத்திருக்கிறார்,” எனப் பாராட்டியுள்ளார்.