பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிய ஜோன்ஸ்!
|
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அவரது நெருங்கிய கூட்டாளியும் அமைச்சரவை உறுப்பினருமான டாரன் ஜோன்ஸ் (Darren Jones), பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம், முன்னாள் மான்செஸ்டர் மேயர் ஆன்டி பர்னாமுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். |
|
ஜோன்ஸ், ஆன்டி பர்னாமின் பொருளாதார திட்டங்கள் குறித்து நேரடியாக ஆலோசனை நடத்தியதாகவும், அவர் முன்வைத்த திட்டங்கள் சந்தைகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். “சிறிதளவு கூடுதல் கடன் எடுக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் அது நம்பகமான வளர்ச்சி திட்டத்துடன் இருக்க வேண்டும்” என்று ஜோன்ஸ் கூறினார். கடந்த ஆண்டு ஆன்டி பர்னாம், “நாடு பத்திர சந்தைகளின் அடிமையாக இருக்கக்கூடாது” என்ற கருத்தை வெளியிட்டதால் முதலீட்டாளர்கள் கவலைப்பட்டனர். ஆனால் பின்னர் அவர் தனது கருத்து தவறாக விளக்கப்பட்டதாக கூறினார். ஸ்டார்மர், கட்சியின் குறைந்த வாக்கு ஆதரவு மற்றும் உள்ளூர் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். ஜூலை 9-ஆம் திகதி லேபர் கட்சியின் தலைமைத் தேர்தல் தொடங்க உள்ளது. தற்போது ஆன்டி பர்னாம் மட்டுமே வேட்பாளராக பெயர் முன்வைத்துள்ளதால், அவர் Coronation (முடிசூட்டு) முறையில் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் அவர் பிரித்தானியாவின் ஏழாவது பிரதமராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. ஜோன்ஸ், “ஆன்டி பர்னாம் அடுத்த பிரதமராக இருப்பார். கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்தாலும் அவர் வெற்றி பெறுவார்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார். |