மிரட்டும் ஒமிக்ரோன் !

10.12.2021 16:25:11

ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலங்கை வர விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச (Upul Darmadhasa) தெரிவித்தார்.

இதற்கமைய, தென் ஆபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, லெசோதோ, சுவாஸிலாந்து மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கே தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி தென் ஆபிரிக்காவில் ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொற்றுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கடந்த 27ஆம் திகதி நள்ளரிவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி 6 ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.