USA பயணிக்கும் UK ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

14.11.2025 14:33:04

அமெரிக்க குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பத்திரிகையாளரின் மனைவி, உலகக் கோப்பைக்காக அமெரிக்காவுக்கு பயணிக்கும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சாமியின் தடுப்புக்காவல் குறித்தும் இந்நிலையில் அமெரிக்காவிற்கு பயணிக்கும் இங்கிலாந்து மக்கள் குறித்தும் இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்து அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கை குறித்தும் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக (Sami Hamdi) சாமி ஹம்டி மற்றும் அவரது மனைவி (Soumaya ) சௌமயா, தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க குடியேற்றக் காவலால் பதினைந்து நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பத்திரிகையாளர் (Sami Hamdi) சமீ ஹம்டியின் மனைவி, 2026 உலகக் கோப்பைக்காக அமெரிக்காவுக்கு பயணிக்கும் கால்பந்து ரசிகர்களுக்கு தடுத்து வைக்கப்படும் அபாயம் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் ஹம்டி நேற்றையதினம் இங்கிலாந்துக்கு திரும்பினார்.

 

குறித்த பத்திரிகையாளர் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆராயும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை இல்லாமல் ஹம்டியின் விசாவை ரத்து செய்தனர்.

இதேவேளை, பாதுகாப்பு விதிகள் காரணமாக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும், அவர் சட்டவிரோதமாக நாட்டில் இருந்ததாகவும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கம் (ICE) தெரிவித்து 15 நாட்கள் அவரை தடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் உலகக் கோப்பை நடைபெறவிருப்பதால், அங்கு செல்லும் இங்கிலாந்து மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்