
பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமாகும் ஜெகபதிபாபு
22.10.2021 16:10:01
தென்னிந்திய மொழிப்படங்களில் வில்லனாக நடித்து வருபவர் ஜெகபதிபாபு. தற்போது புஷ்பா, சலார் போன்ற மெகா படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் முதன்முதலாக ஹிந்தியில் புகர் என்ற படத்தில் அறிமுகமாகிறார் ஜெகபதிபாபு. விலங்குகளை மையமாகக் கொண்ட இந்த திரில்லர் படத்தை லகான் படத்தை இயக்கிய அசுதோஷ் கோவாரிக்கர் இயக்குகிறார். பர்ஹான் அக்தர் நாயகனாக நடிக்க, ரகுல்பிரீத்சிங் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் இருந்து பல வெளிநாடுகளில் உள்ள காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.