ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசைவெளியீடு குறித்த அறிவிப்பு !

28.07.2021 10:24:45

இயக்குனர் ராஜமவுலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் பாடிய பாடலின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கீரவாணி இசையில் நட்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் ராம்சரண் தேஜா, ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.