ஜனநாயக மாநாடுக்கு தைவானுக்கு மட்டும் அழைப்பு

25.11.2021 11:36:57

ஜனநாயகம் தொடர்பாக ஆன்லைனில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்கா, சீனாவை அழைக்கவில்லை.
அமெரிக்கா தலைமையில் ஜனநாயகம் என்ற தலைப்பிலான மாநாடு டிச.9, 10ல் நடக்கிறது.

ஜனநாயக நாடுகளுக்கான சவால்கள், வாய்ப்புகள், அதனை எதிர்கொள்ளுதல், ஊழலுக்கு எதிராகவும், மனித உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.


வீடியோ கான்பரன்சிங் முறையில் அதிபர் பைடன் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதில் தைவானை அழைத்துள்ள அமெரிக்கா, சீனாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.