விரைவில் முக்கிய அறிவிப்பு - காஜல் அகர்வால்

08.10.2021 15:32:42

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவருக்கும் கவுதம் கிச்லு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியாகி வந்தது. தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்க ஒப்பந்தமான 'தி கோஸ்ட்' என்ற படத்திலிருந்து காஜல் விலகினார். கர்ப்பமானதுதான் அதற்குக் காரணம் என்றார்கள். இந்நிலையில், “விரைவில் முக்கிய அறிவிப்பு, காத்திருங்கள்” என காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதைப் பற்றித்தான் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் எனத் தெரிகிறது.

தமிழில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார் காஜல். ஏற்கெனவே, இந்தப் படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போகிறது. காஜல் கர்ப்பம் என்றால் அவர் குழந்தை பெற்று திரும்பும் வரை படக்குழு காத்திருக்க வேண்டும்.