யாழ்.மாநகரசபை வரவு செலவுத்திட்டம் தோல்வி!
14.02.2023 08:10:36
யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 8 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதல்வர் இ.ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
அமர்வில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரெலோ கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் து.ஈசன், புளொட்டைச் சேர்ந்த பி. தர்சானந்,
சு.சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எஸ். சாந்தரூபனும் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை.
வரவு – செலவுத்திட்டத்திற்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் 8 மேலதிக வாக்குகளால்
வரவு – செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.