லவ் யூ பிசாசு !

14.07.2022 10:00:00

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2. இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், 'பிசாசு.' அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மனிதர்களை விட மிஸ்கினின் பிசாசு உன்னதமானது. லவ் டூ யூ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகிறது.