பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி இரகசிய ஒப்பந்தம்?

27.04.2022 09:47:26

பசில் ராஜபக்ஷவுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் செய்துள்ளதா? என நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்குத் தயாராகி பல வாரங்கள் கடந்து விட்டதாகவும், இப்போது அதைச் செய்வதற்கான உற்சாகம் அவர்களிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பெரும்பான்மை மக்களின் கோரிக்கையின்படி அரசாங்கத்தை வெளியேற்றி சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதில் தாமதம் ஏற்பட்டதன் பின்னணியில், சில இரகசியத்தன்மை இருப்பதாக தான் உணர்வதாகவும் குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஆர்வத்தையும் கொண்டிருக்கவில்லை என தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தற்போது அதற்கு எதிராக பேசுவதாகவும் சுட்டிக்காட்டினார்.