தலிபான்களுடன் பேச்சு நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஏஞ்சலா மெர்கல்
'ஆப்கன் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காக, தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்' என, ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். பாதுகாப்புக் கருதி ஆப்கனில் வசித்த பிற நாட்டு மக்கள், தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மேலும், ஆப்கன் நாட்டு மக்களும் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு செல்லத் துவங்கி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களின் அரசிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'ஆப்கன் மக்களின் பாதுகாப்பிற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்' என, ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.