ஒரு வாரத்தின் பின் விமான சேவைகளை ஆரம்பிக்கும் கட்டார்!
07.03.2026 14:31:22
|
இஸ்ரேல் - ஈரான் போரால் மத்திய கிழக்கில் பதற்றநிலை ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் வானூர்தி சேவைகளை மீண்டும் தொடங்குவதாக கட்டார் அறிவித்துள்ளது. எனினும் வெளியேற்றம் மற்றும் அத்தியாவசிய சரக்கு வானூர்திகளுக்கு மாத்திரமே ஓரளவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
|
இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்த நிலையில், ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை அடுத்து போர் தீவிரம் அடைத்துள்ளது. இதன் காரணமாக அச்சத்தினால் பல நாடுகள் தமது வான் வெளியினை மூடியுள்ளதானால் விமான போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. |