
வரிகளை விலக்க இந்தியா இணக்கம்!
அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 100சதவீதம் குறைக்க இந்தியா தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி நேற்றைய தினம்(16) கட்டாரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
இதேவேளை, அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்துள்ளதாகவும் வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதக்கவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்திருந்த நிலையில் சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தாற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.