இரட்டை குண்டு வெடிப்பு

07.02.2024 15:05:09

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில்  இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துடன்  பலர் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட  நாளிலிருந்து, ஆங்காங்கே குண்டு வெடிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில்,  பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் மாவட்டத்தில், இன்று (07) சுயேச்சை தேர்தல் வேட்பாளரின் அலுவலகம் அருகே  இந்த குண்டுவெடிப்பு  இடம்பெற்றுள்ளது.  இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.