பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது!

02.03.2025 10:50:14

இலஞ்சம் கோரியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ்  உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை  நேற்று (01) இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கல்னேவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட அதிகாரிகள்,  முறைப்பாட்டாளரின்  பிரச்சினையொன்றைத் தீர்த்து வைப்பதற்காக அவரிடம்  30, 000 ரூபாயை இலஞ்சமாகக் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதவான்   உத்தரவிட்டுள்ளார்.