
1300 அரசு ஊழியர்களை பணிநீக்கம்!
அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1300 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டை முன் எப்போதும் இல்லாத வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது நோக்கம் என டிரம்ப் அறிவித்திருந்தார்.
அதனை செயல்படுத்தும் பொருட்டு, நிர்வாக சீர்திருத்தம், வரி விதிப்பு என ஒவ்வொரு கட்டங்களாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந் நிலையில் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக, வெளியுறவுத்துறையில் உள்ள 1300 பணியாளர்களை முதல்கட்டமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அவரின் உத்தரவுப்படி, உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1107 பேரும், வெளிநாட்டு பணிகளில் 246 பேரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணி நீக்கத்தை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அலுவலகங்களின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.