பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை முதல்வர் வலியுறுத்தி உள்ளார். பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியைத் திரும்பப் பெறவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை: தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமான ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடும் வகையில். இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்தும், அதனால் நூல் மற்றும் ஜவுளி விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் பிரதமருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையைப் போக்கிடவும், நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினைக் கொண்டுவர உதவிடும் பொருட்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.