ஜப்பானில் அமோக வரவேற்பு

25.07.2021 12:10:52

ரஜினி நடித்துள்ள தர்பார் படம் ஜப்பானில் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூல் சாதனை படைத்து வருகிறது.

நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் ரஜினி நடிக்கும் படங்கள் ஜப்பானிலும் தொடர்ந்து வெளியாகி பெரிய வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான தர்பார் திரைப்படம், கடந்த வாரம் ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ரஜினியின் ஜப்பானிய ரசிகர்கள் தர்பார் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வசூல் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பானின் கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் தர்பார் படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தர்பார் படம் தமிழ்நாட்டில் வெளியானபோது கலவையான விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.