ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் புதிய சதி!
|
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அவரைக் கொல்வதற்கான ஈரானின் புதிய சதித்திட்டம் குறித்து இஸ்ரேலிய உளவுத்துறையிடம் தரவுகள் சிக்கியுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என மிகவும் விரும்புவதாகக் குறிப்பிட்ட அதே வேளையில், ஈரானியர்கள் பைத்தியக்காரத்தனமானவர்கள் என்றும், அவர்கள் இந்த வாரத் தொடக்கத்தில் தன்னை ஒழித்துக்கட்ட விரும்பியதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
|
|
ட்ரம்புக்கு எதிரான அந்தச் சதித்திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை; இருப்பினும், வியாழக்கிழமையன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள ஒப்புக்கொண்டார். துருக்கியில் வைத்தே, ஈரான் தம்மைக் கொல்ல சதி செய்து வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டார். தாம் ஒரு அதிர்ஷ்டமானவன் என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஆனால் அந்த அதிர்ஷ்டம் அதிக காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டார். அவர்கள் மிக மோசமானவர்கள், புற்றுநோய் போன்றவர்கள், நாம் அவர்களை ஒழிக்க வேண்டும் என்றார். துருக்கியில் ட்ரம்ப் தங்கியிருக்கும் பகுதியில் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என ஈரானின் கடும்போக்கு அரசியல்வாதிகள் சிலர் வெளிப்படையாகக் கோரிய நிலையிலேயே, ட்ரம்பின் மிரட்டல் வெளியானது. மேலும், மார்கோ ரூபியோ மற்றும் தனது அமைச்சரவையின் பிற முக்கிய அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதும், ட்ரம்ப் மீண்டும் அவரது இறப்பு குறித்துக் குறிப்பிட்டார். உண்மையில், ஈரான் மீதான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்ததன் பின்னரே, தன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள் என ட்ரம்ப் கூறி வருகிறார். முன்னதாக ட்ரம்பையோ அல்லது அவரது முதல் பதவிக்காலத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகளையோ படுகொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டி வருவதாக, அவரது 2024-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்க உளவுத்துறை பலமுறை எச்சரித்தது. ஈரான் மீதான அச்சம் காரணமாக, பாம்பியோ மற்றும் ஈரானுக்கான முன்னாள் தூதர் பிரையன் ஹூக் ஆகியோர், அரசு வழங்கும் இடைவிடாத பாதுகாப்பின் கீழ் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். இதனிடையே, இஸ்ரேல் எதிர்பார்த்தது போலவே ஈரான் மீதான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், முழு அளவிலான போருக்குத் திரும்புவது குறித்த கருத்துகளைப் புறக்கணிக்க முயன்றபோதிலும், அமெரிக்காவின் புதிய சுற்றுத் தாக்குதல்கள் வரவிருப்பதாக ட்ரம்ப் புதன்கிழமையன்று எச்சரித்தார். |