சுவீடன்- பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் !

04.08.2022 11:11:05

சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளமை சுவீடன் மற்றும் பின்லாந்துக்கு உற்சாகம் அளித்துள்ளது.

சேர்க்கை நெறிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன், அவை அனைத்து 30 நேட்டோ உறுப்பு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும், அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு புதிய உறுப்பினர்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியில் சேர சுவீடன் மற்றும் பின்லாந்து விண்ணப்பித்தன. இப்போது வரை, இரு நாடுகளும் நேட்டோவின் நெருங்கிய பங்காளிகளாக இருந்தன, ஆனால் உறுப்பினர்களாக இல்லை.