16 வயதான மாணவி சாதனை!
30.05.2024 08:48:03
சர்வதேச எவரெஸ்ட் தினத்தை முன்னிட்டு, மும்பையைச் சேர்ந்த ‘காம்யா கார்த்திகேயன்‘ என்ற 16 வயதான பாடசாலை மாணவியொருவர் நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளம் வயது இந்தியர் என்ற பெருமையைக் குறித்த மாணவி பெற்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவிக்கு நேபாள பிரதமர் தமது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.