வடகொரியாவுக்கு கோவிட் மருந்து!

08.10.2021 15:14:45

வடகொரியாவுக்குத் தேவையான கோவிட் மருந்துகளை சீனாவில் இருந்து கப்பல் வழியாக உலக சுகாதார அமைப்பு அனுப்பத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவிட் பெருந்தொற்றால் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகின. ஆனால், கோவிட் தொற்று குறித்த எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த வடகொரியா தொடர்ந்து தங்கள் நாட்டு எல்லைகளை மூடிவைத்தது.



சீனா வழங்கிய சினோவாக் கோவிட் தடுப்பூசியையும் வடகொரியா வாங்க மறுத்தது. மேலும், 'தங்கள் நாட்டில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை' எனத் தெரிவித்தது.இந்நிலையில், சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு உலக சுகாதார அமைப்பு, கோவிட் மருந்துகளை அனுப்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தியில், 'வடகொரியாவுக்குத் தேவையான கோவிட் மருந்துப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் தாலியன் துறைமுகத்திலிருந்து வடகொரியாவுக்கு மருத்துவப் பொருட்களை அனுப்பப்படுகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.