உத்தரபிரதேச மாவட்டத்திற்கு ராகுல் காந்தி விஐயம்!

05.07.2024 08:11:10

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று விஐயம் செய்துள்ளார்

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் இடம்பெற்ற பிரசங்க கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 உயிரிழந்துள்ள நிலையில் அவர் அங்கு விஐயம் செய்துள்ளார்

 

இந்தச் சூழலில் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து இது தொடர்பில் கேட்டறிந்து வருகின்றார்

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா சாமியாரின் பிரசங்க கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.