தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்!
யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா, எச்சரித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்களான சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை குறித்த கலைஞர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு நபரொருவருக்கு தலா 30,000 ரூபாய் அறவிடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விளம்பரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் போதே மு.தம்பிராசா, இவ்வாறு எச்சரித்துள்ளார்.