சாய் அப்யங்கரின் காட்டுல மழை.
மூன்று ஆல்பம் சாங்தான். ஒரே நாளில் ஒஹோனு வாழ்க்கைனு சொல்லுவாங்க. அப்படித்தான் சாய் அப்யங்கரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. மூன்று ஹிட் ஆல்பங்களை கொடுத்த சாய் அப்யங்கர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். அதுவும் டியூட் படம்தான் அவருடைய இசையில் வெளிவந்த முதல் படம். அதன் பிறகு எந்தவொரு படமும் இல்லை. ஆனால் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.
இருந்தாலும் டியூட் மற்றும் ஆல்பம் பாடலால் சாய் அப்யங்கரின் புகழ் எங்கேயோ போய்விட்டது. பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் சாய் தான் கமிட் ஆகியுள்ளார். சூர்யாவின் கருப்பு திரைப்படத்திற்கும் அவர்தான் இசை. சொல்லப்போனால் அனிருத்தை விட கோடம்பாக்கத்தில் சாய் பெயர்தான் அடிக்கடி உச்சரித்து வருகின்றனர். இப்படி சாய்யின் இந்த வெற்றிக்கு என்ன காரணமாக இருக்கும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியுள்ளார்.
சாய் கிட்ட இருக்கிற மிகப்பெரிய பிளஸ் என்னவெனில் அனிருத் கிட்ட இல்லாதது அவருடைய டியூன்ஸ் மியூசிக்கலாக இருக்கிறது. அழகாக பாடுகிறார். பாடுகிற அளவுக்கு அதே மாதிரியான டியூன்ஸையும் கம்போஸ் செய்கிறார். இப்ப உள்ள இளைஞர்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் ஒரு சிறிய சூட்சமத்தை நான் சொல்கிறேன். சாய் இவ்வளவு பெரிய ஹிட்டானதுக்கு காரணம் அவர் நடனம் ஆடினார், அழகாக பாடினார், அழகான பெண்களை வைத்து ஆல்பம் வீடியோ பண்ணினார்,
இதெல்லாம் இரண்டாவது. அடிப்படையில் ஒரு பெண் அழகாய் இருந்து அவளுக்கு மேக்கப் போட்டு இன்னும் அழகாவாள். அதே மாதிரி சாய் இயற்கையிலேயே அழகான மியூசிக்கை கொடுக்கிறார். அவரிடம் வருகின்ற டியூன்ஸ் எல்லாமே எம் எஸ் வி போடுகிற டியூன்ஸ் மாதிரியே தான் இருக்கும். அனிருத் போடுகிற டியூன்ஸ் எல்லாமே அமெரிக்கன் இங்கிலீஷ் பாப் பாடலிலிருந்து எடுக்கிற மியூசிக்.