தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

27.06.2024 08:07:00

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும், சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதிலும் அ.தி.மு.கவினர் தற்காலிகமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புத்  தெரிவித்து அ.தி.மு.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தொடங்கி உள்ள போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதேவேளை  அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கம் எவ்வித இடையூறும் செய்யாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

 

மேலும் 23 நிபந்தனைகளுடன் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.