நாடாளுமன்றத்தில் நாங்கள் சொல்வதை கேட்கதான் மந்திரிகள் உள்ளனர்

08.08.2022 10:18:00

நாடாளுமன்றத்தில் நாங்கள் சொல்வதை கேட்க தான் மந்திரிகளாக உள்ளனர் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

வேலூர் மாவட்டம் காட்பாடி, பள்ளிக்குப்பம், பெரியபுதூர் ஆகிய இடங்களில் புதிய பஸ் நிலையம், ரேஷன் கடை ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார்.

பாராளுமன்றத்தில் நாங்கள் சொல்வதை திமுக எம்.பிக்கள் கேட்க மறுக்கிறார்கள் என மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். அவர்கள் சொல்வதை கேட்க நாங்கள் அங்கு போகவில்லை, நாங்கள் (எம்.பிக்கள்) சொல்வதை கேட்க தான் அவர்கள் மந்திரிகளாக உள்ளனர். மேலும் காவேரி - குண்டாறு இணைப்பு குறித்து தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் இடம்பெறவில்லை. இருந்த போதும் மாயனூர் முதல் புதுக்கோட்டை வரை கால்வாய் வெட்டி வருகிறோம். முல்லை பெரியாரில் 137 அடிக்கு நீர் இருந்த போதிலும் அளவுக்கு அதிகமாக வரத்து உள்ளதால் அதை கேரளாவுக்கு திறந்துவிட்டுள்ளோம்.