வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி!

29.04.2025 14:24:17

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, பரஸ்பர நலன் சார்ந்த பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.